என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "செல்போன்கள் கொள்ளை"
- ரகுமான் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
- வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீபெரும்புதூர்:
சுங்குவார்சத்திரம் அடுத்த மொளச்சூர் பகுதியை சேர்ந்தவர் ரகுமான்.இவர் சுங்குவார்சத்திரம் பஜார் பகுதியில் செல்போன் விற்பனை கடை வைத்து உள்ளார்.
நேற்று இரவு விற்பனை முடிந்ததும் வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை ரகுமான் கடையை திறக்க வந்தபோது ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
கடையின் உள்ளே சென்று பார்த்தபோது விற்பனைக்கு வைத்து இருந்த உயர்ரக செல்போன் அனைத்து கொள்ளையடிக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதன் மதிப்பு சுமார் ரூ.40 லட்சம் ஆகும். நள்ளிரவில் வந்த மர்ம கும்பல் செல்போன்கள் அனைத்தையும் சுருட்டி சென்று இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து சுங்குவார் சத்திரம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கடையின் வெளியே இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போது வடமாநில வாலிபர்கள் 3 பேர் கடையின் பூட்டை உடைத்து செல்போன்களை கொள்ளையடித்து செல்வது பதிவாகி உள்ளது. அவர்கள் திட்மிட்டு இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- முத்துவளநாடு கைகாட்டி பகுதியில் செல்போன் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார்.
- கடைக்குள் இருந்த நவீன ஆண்டிராய்டு செல்போன்கள் மற்றும் செல்போனுக்கான இதர உதிரி பாகங்கள் என மொத்தம் ரூ.97 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும் ரூ. 10,000 ரொக்க பணத்தையும் மர்ம ஆசாமிகள் அள்ளிச் சென்றது தெரியவந்தது.
திருச்சி,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி வளநாடு கைகாட்டி மின்வாரிய அலுவலகம் பகுதியைச் சேர்ந்தவர் முத்து (வயது 30). இவர் வளநாடு கைகாட்டி பகுதியில் செல்போன் ஷோரூம் வைத்து நடத்தி வருகிறார். வழக்கம்போல் முத்து நேற்று மாலையில் செல்போன் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார்.
பின்னர் மறுநாள் காலையில் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் செல்போன் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக அவருக்கு செல்போன் மூலமாக தகவல் தெரிவித்தனர். உடனே அவர் பதறியடித்துக் கொண்டு கடைக்கு வந்தார்.
இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது கடைக்குள் இருந்த நவீன ஆண்டிராய்டு செல்போன்கள் மற்றும் செல்போனுக்கான இதர உதிரி பாகங்கள் என மொத்தம் ரூ.97 ஆயிரம் மதிப்பிலான பொருட்களையும் ரூ. 10,000 ரொக்க பணத்தையும் மர்ம ஆசாமிகள் அள்ளிச் சென்றது தெரியவந்தது. மேலும் செல்போன் கடைக்கு அருகாமையில் உள்ள மளிகை கடையின் பூட்டையும் உடைத்து கைவரிசை காட்டியுள்ளனர்.
அங்கிருந்த 2 மூட்டை அரிசி, 70 நோட்டு புத்தகம், 20 ஆயில் கேன்கள் உள்ளிட்ட ரூ.3,000 மதிப்பிலான மளிகை பொருட்கள், மற்றும் ரூ.15,000 ரொக்கப் பணம் ஆகியவற்றையும் அந்த நபர்கள் திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து முத்து மற்றும் மீனாட்சி அம்மாள் ஆகிய இருவரும் வளநாடு போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அடுத்தடுத்த கடைகளில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
சென்னை சிந்தாதிரிப்பேட்டை ரிச்சி தெருவில் செல்போன் கடை நடத்தி வருபவர் ரகுமான். சம்பவத்தன்று இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். அப்போது மர்ம நபர்கள் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 40 செல்போன்களை கொள்ளையடித்து சென்று விட்டனர்.
இது குறித்து ரகுமான் சிந்தாதிரிப்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.
ராமநாதபுரம்:
பரமக்குடி மரைக்காயர் பட்டிணத்தைச் சேர்ந்தவர் குமரேசபாண்டியன் (வயது 65), செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இவர் உறவினர் குமார் (46)என்பவருடன் கடையில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது காரில் வந்த கும்பல் கல்வீசி கடையை தாக்கியதாகவும், கடைக்குள் இருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான 10 செல்போன்களை எடுத்துச் சென்றதாகவும் பரமக்குடி டவுன் போலீசில் குமரேசபாண்டியன் புகார் செய்தார்.
மேலும் அந்த கும்பல் கடையின் முன்பிருந்த தனது கார் கண்ணடிகளை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாகவும், மொத்த சேத மதிப்பு ரூ.8 லட்சம் என்றும் புகாரில் தெரிவித்துள்ளார்.
குமரேசபாண்டியனுக்கும், அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் வருவாய் ஆய்வாளர் கோகுல்நாத் என்ற கணேசுக்கும் சுவர் தொடர்பாக விரோதம் இருந்துள்ளது.
இந்த முன்விரோதத்தில் கோகுல்நாத், சரவணன், சென்னை தலைமை செயலக கண்காணிப்பாளர் நளினி, மங்கையர்கரசி, நாகநாதன், சேதுராமன், ரத்தினவேல்பாண்டி, அனீஷ், சவுந்தரவள்ளி ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டதாக பரமக்குடி டவுன் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்